இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த 8 பேரையும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.
மிரிஹான பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.