சுற்றுலா வீஸாவில் பெண்களை அனுப்பிய நபர் கைது!

பின்தங்கிய பிரதேச பெண்களை சுற்றுலா வீஸாவில் வௌிநாடுகளுக்கு அனுப்பி வந்த நபர் ஒருவரை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

21 வயதான பெண்ணொருவரை டுபாய்க்கு அனுப்ப முயற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் புதுக்கடை தற்காலிக தங்குமிடமொனிறில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவத்தபொல, அலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கைது செய்யும் போது 6 கடவுச்சீட்டுக்கள் மற்றும் குடும்ப விபர அறிக்கைகளை வைத்திருந்தார் என்று விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வௌிவிவகார அமைச்சர் தலத்தா அத்துகோரள, சுற்றுலா வீஸாவில் வேலைவாய்ப்புக்காக வௌிநாடு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தடையை மீறி சுற்றுலா வீஸாவில் வௌிநாடு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிகாட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435