
கொவிட் – 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி அரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை நேற்று ஆரம்பமாகியுள்ளது.
அங்கு செல்லவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 180 ஆகும். முதலாவதாக செல்லும் குழுவை சேர்ந்தோர் அங்கு சவூதி நாட்டில் ஹோட்டல்துறை மற்றும் சேவைகள் துறையில் கடமையில் ஈடுப்படவுள்ளனர்.
சமீபத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமால் ரத்வத்தே மற்றும் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக வேலைவாய்ப்பு முகவர்கள் எதிர்கொண்டிருந்த பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட்டது.
அதனை தொடர்ந்து இவர்கள் சவூதி பயணமாவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எஞ்சியோர் எதிர்வரும் தினங்களில் அங்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் : News.lk