‘சுலோச்சனா’ உண்மையிலேயே பாதிக்கப்பட்டாரா?

குவைத் சென்று தற்போது எவ்வித தொடர்பும் இன்றியிருக்கும் வீ.எம். சுலேச்சனா என்ற பெண் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாகியிருந்தது. அது தொடர்பில் குவைத் உயர்ஸ்தானிகராலயத்திடமிருந்து வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கையொன்றை பெற்றுக்கொண்டுள்ளது.

குறித்த பெண் குவைத்தில் சேவை செய்த காலப்பகுதியில் அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் அவருடைய கடவுச்சீட்டு மற்றும் இலக்கம் கொண்டே வேறொருவர் தூதரகத்திற்கு வருகைத் தந்துள்ளார் என்பதற்கு ஆதாரங்களோ அல்லது கணனித் தரவுகளே இல்லையென்றும் தொழில் முகவர்நிலையத்திற்கு இது தொடர்பில் எவ்வித தகவலும் அறிவிக்கப்படவில்லையென்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுலோச்சனாவின் குடும்பத்தினர் அவர் தொடர்பில் இலங்கை வௌிநாட்டுப் பணியகத்திற்கு குறித்த காலப்பகுதியில் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை. இரு வருடங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டபோதிலும் அவர் அவருடைய மகனுடைய கணக்கிற்கும் வேறொரு நபருடைய கணக்கிற்கும் பணம் வைப்பிலப்பட்ட ரசீகளுக்கமைய சுமார் 2415 டினார் (13 இலட்சம் ரூபாய்) வரையில் வைப்பிலப்பட்டுள்ளது என்ற உயர்ஸ்தானிகரலாய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் சேவைக்காலத்தை பூர்த்தி செய்த பின்னர் அவருடைய தொழில் வழங்குநரினால் விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்திற்கு எவ்வித முறைப்பாடும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் எந்தவகையிலாவது துன்புறுத்தல்களுக்காகி தூதரக உதவியை நாடியிருப்பின் மீண்டும் பாதிப்மை ஏற்படுத்திய தொழில்தருநரிடம் அவர்களை மீள கையளிக்க துதரகம் நடவடிக்கை எடுக்காது. குறித்த பெண் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருப்பின் அது குறித்து பணியகம் கவனம் செலுத்தும் என்றும் பணியகம் உறுதியளித்து.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435