ஊழியர் சேமலாப நிதியத்தில் செயற்பாடற்ற 1.8 மில்லியன் கணக்குகளில் ஒரு ட்ரில்லியன் ரூபா மீளப்பெறாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் அடிக்கடி வேலையை மாற்றும் பழக்கமுள்ளவர்கள். இதனால் அவர்களுக்கு பல ஊழியர் சேமலாப நிதியக் கணக்குகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு குறைந்தது இரு கணக்குகளாவது இருக்கலாம். பொதுவாக புதிய தொழிலுக்கு செல்லும் போது தொழில் வழங்குநர் உங்களுக்கான ஊழியர் சேமலாப நிதியக் கணக்கை ஆரம்பிப்பார் . அவ்வாறு ஆரம்பிக்கும் கணக்கில் உள்ள பணத்தை மீளப் பெற மறந்த செயற்பாடற்ற 1.8 மில்லியன் கணக்குகள் உள்ளதாகவும் அவற்றில் சுமார் ஒரு ட்ரில்லியன் ரூபா நிதி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு தொடர்ச்சியாக பணம் செலுத்தப்படாதிருக்குமாயின் கணக்கு செயலற்றதாகி விடும்.
அவ்வாறான கணக்குகள் உள்ள ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் அவற்றை தற்போதைய கணக்குடன் இணைப்பதன் மூலம் அதனை செயற்பாடுள்ளதாக்க முடியும். அதற்கு தொழிற் திணைக்களம் அல்லது மத்திய வங்கியின் உதவியை நாடி தற்போதைய கணக்குடன் அவற்றை இணைத்துக்கொள்ள முடியும் என்கிறார் தொழில் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர்.
கணக்காளர் நாயகம் திணைக்களம் வௌியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 1.2 மில்லியன் செயலற்ற உறுப்பினர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்ட பங்களிப்பு சுமார் .633 பில்லியன் ரூபாவாகும், அதே நேரத்தில் 2014 ஆம் ஆண்டிற்கான அந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வரவு வைக்கப்பட்ட வட்டி63.54 பில்லியன் ரூபாவாகும். இதனால் தற்போது செயலற்ற உறுப்பினர்களின் கணக்குககளில் மொத்தமாக1 டிரில்லியன் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதுஅதிகாரப்பூர்வ தரவு காட்டுகின்றன.
ஊழியர் சேமலாப நிதியத்தில் 2.6 மில்லியன் கணக்குகளல் 3டிரில்லியன் ரூபா நிதியுள்ளது. தனியார், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டபூர்வ ஆணைக்குழுக்களின் ஊழியர்களின் கணக்குகள் இதில் உள்ளன. மத்திய வங்கி இப்போது அதன் சேவைகள் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குவதற்கான நடைமுறைகள் மற்றும் அமைப்புகளை நெறிப்படுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில், நாட்டின் மிகப் பெரிய சொத்துத் தளத்தைக் கொண்ட நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுகிறது.
இந்த நிதி 2018 ஆம் ஆண்டின் வருவாயைப் பொறுத்தவரை பெரும்பாலான பரஸ்பர நிதிகளைத் கடந்துள்ளது. ஆனால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வட்டி 2018 ஆம் ஆண்டில் 9.54 சதவீதமாகக் குறைந்தது, இது 2006 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ட்ஃபோலியோவின் முதலீடுகளின் வருவாய் 2018 ஆம் ஆண்டில் 10.4 சதவீதமாக இருந்தது, இது முந்தைய ஆண்டு 11.8 சதவீதமாக இருந்தது, உறுப்பினர் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி 9.54 சதவீதமாக இருந்தது, இது 2008 ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைவானது என்று மத்திய வங்கி 2018 ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.