செயலாளர் பதவிகளுக்கு சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிக்குக

அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால்துறை அமைச்சு என்பவற்றின் செயலாளர் பதவிக்கு காணப்படும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோனிடம் கோரியுள்ளது.

இப்பதவிகளுக்கு இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கையுள்ளதாக சங்கத்தின் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன கடந்த 24ஆம் திகதி தெரிவித்தார். அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளமையினால் சிரேஷ்ட அதிகாரிகளை நியமிக்குமாறு வேண்டுகோள்விடுக்க மட்டுமே தம்மால் முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த அமைச்சுக்கு ஏற்கனவே இரு அமைச்சுக்களில் செயலாளராக பணியாற்றும் இருவரும் நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரும் முயற்சி செய்து வருகின்றனர் என்று நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வௌியாகியுள்ளன.

அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் செயலாளராக பதவி வகித்த ஜினசிறி தடல்லகே தபால்துறை அமைச்சின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத அவர் தனது பணியில் இருந்த ஓய்வு பெற்றார். இதனால் இரு அமைச்சுக்களிலும் செயலாளர் பதவி வெறுமையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435