சோள பயிர்ச்செய்கையை மீண்டும் அச்சுறுத்தும் படைப்புழு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மீண்டும் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதாக சோளப் பயிர்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – மாணிக்கபுரம், வள்ளுவர் புரம் பகுதியில் சோளப்பயிர்களில் படைப்புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

படைப்புழுவின் தாக்கத்தினால் பயிர்கள் செழிப்பற்ற நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூபாலப்பிள்ளை உகநாதன், தமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது படைப்புழு தாக்கம் தடுக்கப்பட்டு வருவதாக  குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை – அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்களில் படைப்புழு தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

திருகோணமலை – கிண்ணியா, வட்டமடு, ஆயிலியடியிலும் படைப்புழு தாக்கத்தால் சோளப் பயிர்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் இலாபமில்லாத ஒரு செய்கையாக சோளச்செய்கை அமைந்துவிடும் என விவசாயிகள் கவலை வௌியிட்டனர்.

இந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படைப்புழுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

படைப்புழு பெருகும் காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435