ஜனவசம தோட்டங்களில் வாழும் மக்களுக்கு வீடு மற்றும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பது தொடர்பான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ. அரவிந்த் குமார் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஜனவசம தோட்டங்களில் வாழும் மக்களுக்கு காணி பகிர்வு தொடர்பான விடயமே இந்தக் கலந்துரையாடலில் முக்கியத்துவம் பெற்றிருந்தாக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.
ஜனவசம தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக தலா 7 ஏக்கர் காணிகள் வழங்கப்படவும், தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணிகளை வழங்கவும் கொள்கையளவில் முஎடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் நலன்புரி விடயங்களை முன்னெடுத்தல் என்பன குறித்தும் காலந்துரையாடப்பட்டது. இந்த விடயங்கள் குறித்து மேலும் கலந்துரைடல்கள் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.