ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்வுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கட்டாயம் கிடைக்க வேண்டும் என்றும், இதற்கமைய, 19ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்துவதற்கும் ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் ஆறுமுகன் தொண்டமான் காணொளி ஊடாக தெரிவித்துள்ளார்.
#CWC #1000ரூபா #சம்பள_உயர்வு #கூட்டு_ஒப்பந்தம்
வேலைத்தளம்