ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதற்கு 6 இலட்சம் ரூபா பணத்தை அறவிட்ட குறித்த பெண் தொழில்வாய்ப்பை பெற்றுத்தராத காரணத்தினால் பணியகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த சமிலா சதுரங்கனி ஜயவர்தன என்ற குறித்த கடந்த 21ம் திகதி பத்தரமுல்ல குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமற்ற வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றினை குறித்த பெண் நடத்தி வந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 22ம் திகதி கம்பஹா தொழிலாளர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 6ம் திகதி வரை தடுப்புக்காவலில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.