ஜூன் மாதம் 5,000 ரூபா நிவாரணம் இல்லை: அரசாங்கம் முடிவு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான கொரோனா நிவாரண நிதியான 5,000 ரூபாவை எதிர்வரும் ஜூன் மாதம் வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2020 மே மாதம் 20 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சரவை பேச்சாளர்களான அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, கலாநிதி ரமேஷ் பதிரண ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக வருமானங்களை இழந்தவர்களுக்கும் சமூர்த்தி பயனாளிகள் அடங்கலாக குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்காக ரூபா 5000 நிவாரண கொடுப்பனவாக செலுத்துவதற்காக 2500 இற்கும் 3000 கோடி ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை ஏப்ரல் மாதத்தில் ஒதுக்கீடு செய்ததாகவும் மே மாதத்திற்காக 51, 44046 பேருக்கு இந்த நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

மே மாதத்திற்காக இதற்கென 25,720 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் போது பிரதமரினால் இதற்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியதுடன் இதற்காக ரூபா 16,000 மில்லியன் மேலதிக நிதியை பெற்றுக்கொள்வதற்காக , சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்காக குறுகிய கால கடனாக பெற்றுக்கொள்வதற்கும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

இது போன்று இந்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதம் அமைச்சரவையினால் விசேட கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் ஜுன் மாதத்தில் இந்த கொடுப்பனவு வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் தொடர்பில் மதிப்பளித்து ஜுன் மாதத்திற்காக இந்த கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன் போது இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்கழுவின் ஆலோசனைக்கு அமைய பட்டதாரிகளுக்காக ரூபா 20,000 கொடுப்பனவு வழங்குவதை இடைநிறுத்தி முன்மாதிரியாக செயல்பட்டமை தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் : News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435