எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சப்ரகமுவ மாகாண பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 900 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
எம்பிலிபிட்டிய கல்வி வலயத்தின் கீழியங்கும் தமிழ், சிங்கள பாடசாலை அதிபர்களுக்கான செயலமர்வு கடந்த வாரம் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஆளுநர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. இந்நியமனங்களில் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ இடமளிக்கப்போவதில்லை. உரிய சட்டதிட்டங்களுக்கமைய நேர்மையான முறையில் இந்நியமனங்கள் வழங்கப்படும். சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளிலேயே அதிக ஆசிரியர் தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே ஏற்கனவே மாகாண பாடசாலைகளில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.