டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக பண மோசடி!

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஐந்து இளைஞர்களிடம் 1,80,000 ரூபா பண மோசடி செய்த இருவரை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 5 இளைஞரகள் இவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களினால் ஏற்கனவே இரு இளைஞரகள் சுற்றுலா வீஸாவினூடாக டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் 5 நாட்கள் டுபாய் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நேற்று மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு ஆமர் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் இல. 5, பங்களாவத்த வீதி, மாபோல, வத்தளை என்ற முகவரியைச் சேர்ந்த மொஹமட் பொஹமட் பைசல் மற்றும் சலாதீன் மொஹமட் மஹரூப் என மேலதி விசாரணைகளில் கண்ட‍றியப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435