கத்தாரில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,921 ஆக அதிகரிப்பு

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 11,921 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் (28.04.2020) மட்டும் புதியதாக 677 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 88,607 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 11,921 பேரே இதுவரை கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கொரேனா வைரஸ் காரணமாக கத்தாரில் இது வரை 10 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன்இ 1,134 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435