தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்பட்ட விமானநிலைய ஊழியர்

தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி செல்ல முயன்ற பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை உடம்பில் மறைத்து வைத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வௌியேற முற்பட்டபோது சுங்கத் திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சுங்கத் திணைக்களத்தின மேலதிக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும் பணியில் ஈடுபட்டு வந்த 41 வயதான குறித்த ஊழியர் குருணாகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் குறித்த விபரங்கள் ஏற்கனவே சுங்கத் திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக்கு தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் வயிற்றுப் பிரதேசத்தில் 6 மற்றும் 500 கிராம் எடையுள்ள 65 தங்க பிஸ்கட்டுக்களை கட்டிக்காட்டிக்கொண்டு விமான நிலையத்தின் வௌியேறும் நுழைவாயிலினூடாக வௌியேற முற்பட்ட சமயத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435