தனியார்துறை அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம்

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 12,500.00 ரூபாவாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் இத்தொகை 10,000 ரூபாவாகும்.

தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர, தேசிய தொழில் ஆலோசனை சபையின் விசேட குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்ட பின்னர் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுதவிர ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்திற்கு வரவுசெலவு சலுகைக்கொடுப்பனவு 3,500 இணைத்துக்கொள்ளப்படவேண்டும், ஆக தனியார் துறையில் பணியாற்றும் ஒருவரின் ஆகக்குறைந்த சம்பளம் 16,000 ரூபாவாகும்.

இது குறித்து தெரிவித்த தொழிற்சங்கத் தலைவர் பாலித்த அத்துகோரள, இச்சம்பள நிர்ணயமானது முறைசாரா பிரிவில் பணியாற்றுபவர்களுக்கே நன்மைபயக்கும் என்றபோதிலும் முறைசாரா தொழிலில் இருப்பவர்களுக்கு இதனை விடவும் அதிக தொகை சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார்துறை தொடர்பில் மும்மொழி சம்பள ஆணைக்குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கா மிரர்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435