தனியார் சேவையில் இருந்து விலகவுள்ள விசேட வைத்திய நிபுணர்கள்

எதிர்வரும் 18ம் திகதியுடன் தனியார் வைத்தியசேவையில் இருந்து விலகிக்கொள்ள விசேட வைத்திய நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரசினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சுனில் விஜேசிங்க தெரிவித்தார்.

புதிய வரிக்கொள்கைக்கமைய ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வைத்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 24 வீதம் வரியாக அறவிடப்படவுள்ளது. அதனை 12 வீதமாக குறைக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பாக நேற்று (11) மாலை நிதியமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு வருடம் கால அவகாசம் வழங்குமாறு நிதியமைச்சர் விசேட வைத்திய நிபுணர்கள் சங்க பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்விடுத்தார்.

குறித்த கோரிக்கைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் தனியார் வைத்தியசேவைகளில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் இன்று (12) நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் மேற்படி விடயம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுனில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435