தென் மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 314 பேரை சேவையில் இணைக்க தென் மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தென் மாகாணத்தில் 314 தமிழ் ஆசிரியர் வெற்றிடங்க் காணப்படுன்றன. அவற்றுக்கான ஆட்சேர்ப்புக்கு இரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இன்னும் இரு மாதங்களுக்குள் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது என்று மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு தென் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவவில்லை. எனினும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியுடன் 1,700 வெற்றிடங்கள் உருவாகும். அவ்வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு, நேர்முகத்தேர்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று தென் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.