தரம் ஒன்றில் மாணவர் இணைத்தல்- நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

தரம் ஒன்றில் வகுப்புக்கு 40 மாணவர்களை இணைக்கும் தீர்மானத்தை உடனடியாக மீள்திருத்தம் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் அவ்வாறில்லாவிடின் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்ற உதவியை நாடும் என்றும் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வகுப்பறைக்கு 35 மாணவர்கள் உள்ளீர்க்கவேண்டும் என்று வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து கல்வியமைச்சு 40 மாணவர்களை உள்ளீர்க்க மேற்கொண்டுள்ள தீர்மானமானது சட்டவிரோதமானது என்று ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

2011ம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய 2021ம் ஆண்டு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்த அப்போதைய கல்வியமைச்சு சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டிருந்தது. அதற்ககேற்ப படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 40ஆக அதிகரிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானமானது நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக அமைந்துள்ளதுடன் அதற்கு எதிராக உச்சநீதிமன்றததை நாடவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானம் மீறப்படுவதனால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435