அரச நிறுவனங்களில் நாளாந்த சம்பள அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் அல்லது சலுகை அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக சேவை சுற்றுநிரூபம் 25/2004 மற்றும் 25/2004(1) வௌிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அவசியமான தகமைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போன சேவை நியமனத்தை பெற முடியாது போன ஊழியர்களுக்கும் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்ட பின்னர், தேவைக்கருதி அரச நிறுவனங்களில் ஆரம்ப தரத்திற்குட்பட்ட பதவிகளுக்கு நாளாந்த சம்பள அடிப்படையில், ஒப்பந்த மற்றும் சலுகையடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களையுட’ நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அவசியமான நிதியை பலப்படுத்துவதற்காகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வள அபிவிருத்தியமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இணைந்து முன்வைத்த பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
180 நாட்களுக்கு மேலாக பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனைத்து தகமைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் ஊய்வூதியத்துடன் கூடிய நியமனக் கடிதங்கள் வழங்ககப்படவுள்ளதாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.