தாதியர் பல்கலைக்கழகம் அடுத்தவருடம் ஆரம்பம்

நாட்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக்களை எதிர்வரும் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டிலுள்ள 17 தாதியர் கல்லூரிகளை ஒன்றிணைத்து தாதியர் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தாதியர்களுக்கான பட்டப்படிப்புக்கு என கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப் பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன.

தாதியர் பல்கலைக்கழகத்தினூடாக வருடமொன்றுக்கு 3 ஆயிரம் பட்டதாரி தாதியர்களை உருவாக்க முடியும் என்றார்.

 

நன்றி – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435