தீர்க்கப்படாத 8000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர் பிரச்சினைகள்

பொது தொழில் அதிகாரிகள் 17 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட வேலைநிறுத்தத்தினால் சுமார் 8000 இற்கும் அதிகமான தொழிலாளர் பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான 23,000 வழக்குகள் விசாரிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தொழில் திணைக்களத்திற்கு விஜயம் செய்யும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது தொழில் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இரேஷ் சிந்தக்க கமகே கருத்து தெரிவிக்கையில், இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்

குறித்த அதிகாரிகள் அநீதியான கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ரவீந்தர சமரவீர தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435