கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனைக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது.
துறைமுக அதிகாரசபையின் முழு உரிமையின் கீழ் கிழக்கு முனையத்தை இயக்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அதை இந்திய – இலங்கை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் துறைமுகத்தில் ஏராளமான ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது, எனவே துறைமுகத்தில் கிழக்கு முனைய விற்பனையை கைவிடும்வரை போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக தொழிற்சங்கம் கூறுகிறது.