தென் பகுதி மீனவர்களுக்கும், கடற்பயணிகளுக்கும் எச்சரிக்கைபாணந்துறை தொடக்கம் காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் நாளைய தினம் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் குறித்த கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவர்களும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.