தென் மீனவர்களுக்கு வடக்கில் மீன் பிடிக்க விரைவில் தடை?

தெற்கிலிருந்து முல்லைத்தீவு உட்பட வட மாகாண கடற்பரப்பில் மீன்பிடிக்க வருவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மீனவர் சங்க காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மீனவர் சங்க உறுப்பினர்கள், தென் மாகாணத்தில் இருந்த வரும் மீனவர்களினால் தமது மீனவர்கள் தமது தொழிலை சரிவர செய்துக்கொள்வதில் சிரமம் நிலவுவதாகவும் தென் மாகாண மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் அம்மீனவர்களிடம் போல் தம்மிடம் தேவையான உபகரணங்களும் படகுகளும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோரை தெளிவுப்படுத்துவதாகவும் அதற்கான சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான, எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ. சிவமோகம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435