தெற்கு அதிவேக வீதி தொழிலாளர்கள் போராட்டம்

தெற்கு அதிவேக வீதி நான்காம் கட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மத்தலையில் அமைந்துள்ள சைனா ஹாபர் கட்டுமாணத்துறை கம்பனியின் பிரதான வாயிலை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் (24) இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் அந்தரவெவ தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மத்தலை வரையான நான்காம் கட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“கடந்த இரு மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை” சம்பளம் வழங்கும் தினத்தை கேட்டாலும் தௌிவான பதில் கிடைப்பதில்லை. எனவேதான் நாம் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாளாந்த சம்பளத்திற்கு பணியாற்றிய தமக்கு சம்பளம் கிடைக்காமையினால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளதாகவும் அத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435