தேங்கியுள்ள கடிதங்களை அனுப்ப துரித நடவடிக்கை

பல தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தபால் ஊழியர் பணிநிறுத்ததினால் தற்போது மத்திய தபால் தலைமையகத்தில் தேங்கியுள்ள 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட  கடிதங்களை விநியோகிக்க இரு தினங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்களின் சில கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி கடந்த வாரங்களில் தபால் ஊழியர்களினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேங்கி நின்றன.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் தேங்கி நிற்கும் இந்த தபால்களை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435