தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

15 ஆவது வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பத்திற்காக 100 ரூபாவும்,

தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதி ஒன்றை வழங்குவதற்காக 250 ரூபாவும்,

காணாமல்போன தேசிய அடையாள அட்டையின் இணைப்பிரதியொன்றை வழங்குவதற்காக 500 ரூபாவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2018 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட கட்டணங்களை வறுமை காரணமாக செலுத்த முடியாதவர்கள் பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டணம் செலுத்துவதிலிருந்து விடுவிக்கும் உரிய சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NIC

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435