அடுத்த வருடம் முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்களை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய பாடசாலையில் பணியாற்றும் சுமார் 6000 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக விண்ணப்பித்துள்ளனர் என கல்வியமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர்கள் 2,000 பேரிடமிருந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. ஆசிரியர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றசபை அமைக்கப்பட்ட இவ்விடமாற்றங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
10 வருடங்கள் ஒரே பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவது என்பது கடந்த 2017ம் ஆண்டு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கொண்ட தீர்மானமாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய பாடசாலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் இடமாற்றம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு 12,000 ஆசிரிர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2018ம் ஆண்டு ஐந்தாயிரம் பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு முதல் 2020 வரையான காலப்பகுதியில் ஒரே பாடசாலையில் 10 வருடம் பணியாற்றி இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கல்வியமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.