தேயிலை ஏற்றுமதியின்போது கிலோ ஒன்றுக்கு அறவிடப்படும் 3.50 ரூபா ஏற்றுமதி வரியை, 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஷ் பத்திரன,
இந்த ஏற்றுமதி வரியின் மூலம் கிடைக்கும் நிதியானது இலங்கை தேயிலை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் தேயிலை மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த நிதியத்திற்கு பெருமளவான நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொருளாதாரம் மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவரப்படும் வரையில், ஏற்றுமதியாளர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கு அறவிடப்படும் 3 ரூபா 50 சதம் என்ற ஏற்றுமதி வரியை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக கைவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனூடாக, ஏற்றுமதியாளர்களை பலப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.