தேர்தலின் போது சமூகவலைத்தளங்களை கண்காணிக்க உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களினூடனூடாக பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435