வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்படவுள்ள 457 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியல் தொடர்பான விபரம், ஆளுநர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கல்வி அமைச்சினால், நேற்றைய தினம் குறித்த பெயர்ப்பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பெயர் பட்டியலை பார்வையிடுவதற்காக இன்றும், நாளையும் ஆளுநர் அலுவலகத்தில் சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள், ஆளுநர் ஊடாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகளை சமர்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த தொண்டராசியர்களுக்கான நியமனம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.