கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் சிலர் முன்வைத்துள்ள மேன்முறையீடுகள் பரீசீலிக்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் வெ. தவராஜா தெரிவித்தார்.
தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்த நியமனம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அவர்களில் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர். தற்போது அவை ஆராயப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படும். நியமனங்கள் வழங்கிய பின்னர் இழுபறி இடம்பெறக்கூடாது என்பதே எமது நோக்கம். அதனால்தான் மேன்முறையீட்டுக்கான வாய்ப்பை வழங்கினோம்.
இதனூடாக தெரிவு செய்யப்படுபவர்கள் நேர்முகத்தேர்வினூடாக தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும் என்று மேலதிகச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.