தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்

வடக்கு கிழக்கும் நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் மற்றும் ஏனைய நியமனங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர்

உறுதியளித்துள்ளார் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டு. வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதுற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கிழக்கில் உள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்ளே அதிகம் பணியாற்றுகின்றனர். அவர்களில் 2009.9.3 காலப்பகுதியில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் சிறந்த பிரஜைகளை உருவாக்க கல்வியே முக்கிய பங்களிக்கிறது. கல்வியின் வளர்ச்சியிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது. அதற்கு பாடசாலைகளில் வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும்.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு மாகாணசபைகள் விரும்புவதில்லை. இப்பிரச்சினை எனது பிரதேசமான நுவரெலியாவிலும் உள்ளது. இந்நிலையை மாற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435