தொற்றை கட்டுப்படுத்தாவிடின் உயிரிழப்புகள் அதிகமாகலாம்

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிடின் எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் உயிரிழப்புக்க்ள் அதிகமாகலாம் என்று அரச மருத்துவர அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வௌியிடுகையிலேயே அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள வைரஸ் கட்டுப்பாட்டு நடைமுறைகளை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வராவிடின் நிலைமை மோசமடையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை 300 தொற்றாளர்கள் சமூகத்தில் இருந்து இனங்காணப்பட்டனர். சமூக பரவல் நிலை என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கும்போது அதன் உச்சநிலையை இலங்கை அடைந்துள்ளது. சமூகப்பரவல் ஆரம்பமாகினால் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவு தவிர்க்க முடியாததாகி விடும். இந்நிலை மரணங்களை அதிகரிக்கச் செய்யும் சாத்தியங்கள் உள்ளன. இந்நிலை தொடர்ந்தால் , சரியான தீர்மானங்கள் எடுக்கத் தவறினால் நாடு அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும்.

தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருணாகல ஆகிய மாவட்டங்கள் உயர் தொற்றுக்குள்ளாகிய மாவட்டங்களாக இனங்காணப்படடுள்ளன. ஏனைய மாவட்டங்களுக்கும் இவ்வபாய நிலை காணப்படுகிறது. மாவட்டங்களுக்கிடையில் தொற்று பரவலை தடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை செயற்படுத்துமாறு அரசாங்க்திடம் அறிவித்துள்ளோம் என்றும் டொக்டர் அளுத்கெதர சுட்டிக்காட்டியுள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435