தொழிற்சங்கம் லேக்ஹவுஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

தேசிய பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸ் ஊழியர்களுடைய கொடுப்பனவு, சம்பள உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (06) கைச்சாத்திடப்பட்டது.

தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கமும் லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தத்தில், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2016 ஜனவரி மாதம் அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா சம்பள உயர்வை 1050 ரூபாவாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இத்தொகையை 1250 ரூபாவாக அதிகரிக்கவும், ஊழியரின் செயற்றிறன் அடிப்படையில் வழங்கப்படும் சம்பள அதிகரிப்பினை 2017 ஜனவரி மற்றும் 2018 ஜனவரி ஆகிய மாதங்களில் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதில்லை என்பது தொடர்பிலும் இரு தரப்பிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435