அகில இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் உப தலைவரை கடந்த 28ம் திகதியில் இருந்து காணவில்லை என, அச் சங்கத்தின் தலைவர் நிமந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி முதல் டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பொறுப்பான அமைச்சரால் இந்த விடயம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட போதும், டெலிக்கொம் நிர்வாக அதிகாரி ஏதேச்சையாக செயற்படுவதாக அவர் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், வேலை நிறுத்தத்தை குழப்பும் நோக்கில் இவ்வாறான காணாமல் ஆக்கும் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும், அனைத்து இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
தமது சங்கத்தின் உப தலைவர் பன்னிப்பிடியவிலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காணாமல் போனதாகவும் இது தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.