தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்ட வேண்டாம் – இபோச சங்கம்

இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களை தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்டாது 2006 இலக்கம் 30 முகாமைத்துவ சுற்றுநிருபம் மற்றும் 2016 இலக்கம் 02 சுற்றுநிருபம் என்பவற்றுக்கமைய அனைத்து ஊழியர்களினதும் சம்பளத்தரத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவைகள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

அகில இலங்கை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் சேபால லியனகேவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட இரு சுற்றுநிருபங்களுக்கமைய, அனைத்து ஊழியர்களினதும் சம்பளத்தில் மாற்றங்கள் மேற்கொள்வதாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இலங்கை போக்குவரத்துசபையின் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08ம் திகதி எழுத்து மூலமாக உறுதியளித்திருந்தார். எனினும் அந்த உறுதி மொழிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை போக்குவரத்துசபையில் பணியாற்றும் அனைத்து சாரதிகள், உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோரின் சம்பளம் பி.எல் பிரிவின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் நிர்வாக தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் நிர்வாக தரத்தில் இல்லாத அதிகாரிகளுக்கு இந்த சம்பளத் திட்டம் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்நிலைமை மேலும் தொடர்ந்தால் அந்த ஊழியர்களுக்கு நியாயமான வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை போக்குவரத்துசபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க பின்நிற்கப்போவதில்லை என்றும் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435