தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராய்வது இன்றைய காலத்தின் தேவை

இலங்கை ஆசிரியர் சங்க பிரதான செயலாளர்

இலங்கையில் தொழிற்சங்க செயற்பாடுகளை நோக்குவோமானால் மிக நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ளதைக் காணலாம். எனினும் தற்போதைய உலக நிலைமை மற்றும் முன்னேற்றங்களை நோக்கும் போது நாம் ஓரளவுக்கு பின்தங்கியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு பக்கம் நோக்கும் போது இலங்கையில் தொழிற்சங்க கடமைப் பொறுப்புக்கள் குறுகிய எல்லைகளைக் கொண்டதாக காணப்படுகிறது. ஆழமாக, பரந்த சிந்தனையுடன் தமது தொழில் பிரச்சினைகளுக்கு அப்பாற் சென்று நோக்கும் தன்மை குறைவாக காணப்படுகிறது.

அதனால் தமது உண்மையான கடமை பொறுப்புகள் தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது தொழில் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு பார்த்துக்கொண்டிருப்பதா? அவ்வாறில்யேல், ஜனநாயகம், தொழில் உரிமைகளுக்காக சமூக சவால்களுக்கு மத்தியில் சளைக்காமல் போராடுவதா என்பது தொடர்பில் தீர்மானிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். எனவே இது தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவது மிக அவசியமானதாகும்.

நீங்கள் இக்கருத்தினை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா? இது தொடர்பில் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்கு இம்மாதம் 21ம் திகதி ரேணுகா ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெறும் கலந்துரையாடல் வாய்ப்பளிக்கும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435