தொழிலாளர் உரிமையை நசுக்க முயலும் அரசாங்கம்

தொழிலாளர்கள் போராட்டங்களினூடாக விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் வழங்காது தவிர்ப்பதனூடாக தொழிலாளர் உரிமையை அரசாங்கம் மீறுவதாக தொழிலாளர் போராட்ட மையத்தின் அமைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றினூடாக மேற்படி தெரிவித்துள்ள அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பல்கலைககழக கல்வி சாரா ஊழியர்கள் அவர்களுடைய சம்பள கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு அரசாங்கம் சரியான பதில் வழங்காத காரணத்தினால் வேலை நிறுத்தம் 5 நாட்களாக தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக வேலைக்கு திரும்பாதவர்கள் சேவையை கைவிட்டுச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைசசு நேற்று முன்தினம் (4) வௌியிட்டுளள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பாரக்கும் போது கடந்த 1980 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தின் போது ஐதேக மேற்கொண்ட தீர்மானமே நினைவுக்கு வருகிறது.

ஜூலை போராட்டத்தின் போது அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அரசு இவ்வாறே பதிலளித்தது. தற்போது அவருடைய மருமகனும் அதே போன்ற தீர்மானத்தை எடுக்க முயற்சித்து வருகிறார். கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் ஜனநாயகம் தொடர்பில் பல உறுதி மொழிகளை வழங்கினார்கள். அன்று அவ்விடயம் பற்றி கதைத்து அவர்கள் மகிழ்ந்தனர். ஆனால் இன்று அது காணாமல் போயுள்ளது.

போராட்டத்திற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை பறிப்பதென்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும். போராட்டங்களை தவிர்ப்பதற்கு அல்லது எதிராக நீதிமன்ற உத்தரவினூடாக ஆட்சியாளர்கள் தமது தேவையை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். போராட்ட உரிமையை பறிப்பதற்கான சட்டமூலமொன்றை தற்போது தயாரித்து வருகிறதென்று அறிய முடிகிறது. அவ்வாறெனின் அதற்கு ஏற்ற செயற்பாட்டை மேற்கொள்ள நாம் தயாராக இருக்க ​வேண்டும்.

அரசின் அத்தீர்மானத்திற்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்று அவர்கள் அறிவார்கள். அரச சேவையாளர்களின் ஓய்வூதியத் தொகையை குறைத்தல், தனியார் துறை பணியாளர்களின் 2500 ரூபா சம்பள உயர்வை சரியான முறையில் முன்னெடுக்காமை, வற் மற்றும் வங்கி வரி மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை, எட்கா ஒப்பந்தத்தினூாக இலங்கை தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைக்கும் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை ஒன்றரை வருடாக பிற்போட்டுள்ளமை, ஊழியர் நம்பிக்கை நிதியத்தை திறந்த பொருளாதாரத்தில் முதலீடு செய்தல் என அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் தொழிலாளர்களை வெறுப்படைய செய்துள்ளது. அரசின் இந்த செயற்பாடுகளை இன்று வெறுக்காதவர்கள் நாளை அதற்கு எதிராக செயற்படக்கூடும் என்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியரகளின் வேலைநிறுத்தத்திற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்/ அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435