தொழிலாளர் கேள்வி தொடர்பில் அறிய கணக்கெடுப்பு

நாட்டில் உழைக்கும் வர்க்கத்துக்கான கேள்வி தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கான ஆய்வினை தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.

தனியார்துறை மற்றும் முறைசாரா துறைகளில் ஆளணி கேள்வி குறித்து அறிந்துக்கொள்வதற்காக முதற்தடவையாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்விற்காக 3500 நிறுவனங்கள் முறைசார் நியதியினூடாக தெரிவு செய்வதற்கான தொழில்நுட்ப முறையினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்கள அதிகாரிகள் சென்று விரிவான தரவுகளை சேகரிப்பர்.

இந்த ஆய்வின் போது அதிக எண்ணிக்கையான ஊழியர் கேள்வி நிலவும் துறைகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும் அதேவேளை, அதனடிப்படையில் அதிக வெற்றிடங்கள் நிலவும் தொழில் யாது? அதற்கான கல்வி மற்றும் தொழிற்கல்வித் தகமைகள் என்ன? அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது தனியார் மற்றும் அரச தொழிற்கல்வி நிலையங்களின் பங்களிப்பு எத்தகையது? எதிர்காலத்தில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு தொழிற் பிரிவின் கீழும் தற்போது உள்ள சம்பள அளவு போன்ற விடயங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

தொகை மதிப்பு புள்ளி விபரத்திணைக்களத்தினால் தொகைமதிப்பு சட்ட விதிமுறைகளுக்கமைய இத்தரவுகள் சேகரிக்கப்படுவதுடன் அதற்காக தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் தகவல்களின் ரகசியத் தன்மை பேணப்படும். மேலும் தரவுகளை ஒழுங்கமைப்பதற்கு தவிர வேறு எக்காரணம் கொண்டும் மூன்றாம் நபர்களுக்கு இத்தகவல் வௌியிடப்படமாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435