தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நட்டஈட்டுச் சட்டம் மற்றும் தொழிற்சாலைள் தொடர்பான சட்டங்களில் காலத்திற்கேற்ற வகையான மாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கொழும்பில் நேற்று (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தற்போது சட்டங்களில் இலங்கையில் இன்று இயங்கும் தொழிற்சாலைகளில் 30 வீதமானவையே உள்வாங்கப்பட்டுள்ளமையினால் அவற்றுக்கு கிடைக்கவேண்டிய ஏராளமான நன்மைகள் கிடைக்காமல் போகிறது. அதேபோன்று தொழிலாளருக்கான நட்டஈடு உட்பட பலன் நன்மைகளை வழங்குவதில் சிக்கல்கள் நிலவுவதால் தொழிலாளரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையை கருத்திற்கொண்டு காலத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்களை உருவாக்குவது நன்மை பயக்கும் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.