தொழில்வாய்ப்புகோரி தொழிலற்ற பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம்

அனைத்து பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில்வாய்ப்பை வழங்குமாறுகோரி ஒன்றிணைந்த தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையம முன்பாக இன்று இடம்பெற்றது.

இன்று முற்பகல் கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணி, பிற்பகல் வேளையில் ஜனாதிபதி செயலகம் வரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை இலங்கை வங்கி மாவத்தை ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்ல முற்பட்டபோது, குறித்த பகுதியில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்;தியிருந்தமையினால், போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

57, 000 இற்கும் அதிகமான தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்குமாறும், 20,000 அபிவிருத்தி அதிகாரிகளை ஆட்சேர்ப்பதற்கான வாக்குறுதியை மீறி, அவர்களின் நியமனங்களைக் கைவிடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்திற்காக நாடுமுழுவதிலுமுள்ள தொழிலற்ற பட்டதாரிகள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435