இடைக்கால கொடுப்பனவு இடைநிறுத்தம்

இடைக்கால கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் எச்சரித்துள்ளது.

தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளின் இடைக்கால கொடுப்பனவு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்காத பட்சத்தியேலே தாம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக சங்கத்தின தலைவர் ஐ.சீ கமகே தெரிவித்தார்.

புதிய சுற்று நிரூபத்தின் அடிப்படையில், நேற்று முன்தினம் (30) வரையில், தொழில் திணைக்கள அதிகாரிகளின் இடைக்கால கொடுப்பனவு நூற்றுக்கு 50 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த கொடுப்பனவு குறைக்கப்படுவதாக தொழில் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

எனினும், தமது இடைக்கால கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435