தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா முற்பணமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகங்களும் இலங்கை தேயிலைசபையும் இணைந்து இம்முற்பணத்தை வழங்கவுள்ளது.
தோட்ட உட்கட்டமைப்பு , மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகைத் காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழமையாக 10,000 ரூபா பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வழங்கி வந்த நிலையில் இம்முறை மேலும் 5000 ரூபா அதிகரித்து வழங்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளருக்கு தீபாவளி முற்பணத்தை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.