தோட்டத் தொழிலாளர்களுக்கு திருமணச் சான்றிதழ்

இதுவரையில் சட்டபூர்வமாக திருமணம் செய்யாது இணைந்து வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடமாடும் சேவையினூடாக திருமண சான்றிதழ் வழங்கத் தீர்மானித்துள்ளதாக தொழில் அமைச்சர் டப்ளியு.டி.ஜே செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கஹவத்த பிரதேசத்தில் உள்ள கொட்டேதென்ன தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேமலாப நிதியம் போன்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளதாகவும் குறித்த நிதியங்களில் உள்ள பணத்தை மீளப்பெற வரும் தொழிலாளர்கள் திருமண சான்றிதழ் உட்பட உரிய சட்ட ஆவணங்கள் இன்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435