அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (04) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
குறைந்த அளவு கொழுந்து பறித்தால் முழுநாள் சம்பளம் வழங்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் மறுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்னர் 18 கிலோவுக்கு குறைந்தாலும் முழுநாள் சம்பளம் வழங்கப்பட்டது என்றும் கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் வழங்க முடியாது என்ற தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளது என்றும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் தாம் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இத்தொழிலாளர்கள், கடந்த காலங்களில் 4.30 மணிக்கு வீடு செல்ல அனுமதித்த போதும் தற்போது 5.00 மணிவரை கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாகவும், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை என்றும் இம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
18 மாத நிலுவை சம்பள விடயத்தில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இம்மக்கள் விசனம் வௌியிட்டனர்.
வேலைத்தளம்