நடமாடும் சேவையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கான அறிவுறுத்தல்கள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் சேவையில் ஈடுபடும் வர்த்தகர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்து.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் சேவையில் ஈடுபடும் பலர் தமது நடவடிக்கைகளின போது சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக கடைப்பிப்பதில்லை.

இதனால் வைரஸ் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதினால் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோர் தூய்மையான ஆடை, பாதணி, முகக்கவசம், கையுறை என்பனவற்றை அணிந்திருக்க வேண்டும். அத்துடன், உணவுப் பொருட்களை பொதுமக்கள் தொடுவதற்கு இடமளிக்க கூடாது.

ஒரு மீற்றர் சமூக இடைவெளியை கட்டாயம் பேண வேண்டும் என்றும் பறிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன கூறினார்.

இவற்றை மீறும் வர்த்தகர்களின் ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435