நாட்டில் இன்று ஒரே தடவையில் 57 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நாட்டில் இன்றைய தினம் ஒரே தடவையில் 57 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள கைதிகள் 56 பேருக்கும், அங்கு ஆலோசகராக செயற்படும் மாரவிலயை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு  மையத்திலுள்ள 450 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த 57 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கட்டாரில் இருந்து நாடு திரும்பியவருக்கும் கடற்படை சிப்பாய் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றுறுதியானவர்களி;ன மொத்த எண்ணிக்கை 2,153 ஆக அதிகரித்துள்ளது.

1,979 பேர் குணமடைந்துள்ளனர். 163 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435