நாட்டில் 1815 கிராம சேவகர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

நாடு முழுவதும் உள்ள 1815 கிராம சேவகர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன நேற்றுமுன்தினம் (23) பாராளுமன்றில் தெரிவித்தார்

கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம சேவகர் போட்டிப்பரீட்சையில் தோற்றுவதற்கு 120,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4000 பேருக்கான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதுடன் தகுதி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

அண்மையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நேர்முகத்தேர்வு தாமதமாகியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நேர்முகத்தேர்வுக்காக 30- 40 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வெற்றிடங்கள் நிலவும் கிராம சேவகர் பிரிவுகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டவுடன் தற்போது பணியில் உள்ள ஓய்வு பெற்றவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435